Endless travel

என் முன்னால்
நீட்டப்படும் கைகளில்
இடுவதற்கு
எதுவும் இல்லாததால்

என் அருகில்
குழந்தையைச் சுமந்து
நிற்பவளுக்கு
தருவதற்கு இடமில்லாததால்

என் பயணங்கள்
நிறைவடைவதேயில்லை 

அழகிய பெரியவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.