
உன் வீட்டு எதிரில் நின்றுகொண்டு
உனைப் பற்றி
வெளிச்சமாய் பாடிக்கொண்டிருக்கும்
அந்தத் தெருவிளக்கைப் போல
நீர் ஊற்றிய பாசத்தில்
மை தொட்டு
உன் பெயரைப்
பூக்களாய் எழுதிப்பார்க்கும்
உன் தோட்டத்துச் செடிகளைப்போல-
கண்ணில் படும்போதெல்லாம்
தன் குரலை
நீ வளர்க்கும் உயிரில் தேய்த்து - உனை
மெல்லக் கூப்பிடும்
அந்த இளங்கன்றைப் போல -
உனைப் பார்த்த பரவசத்தில்
கைநீட்டிச் சிணுங்கி ஓடிவரும்
உன் அக்காளின் குழந்தையைப் போல
நானும் அழைக்க உறவு வேண்டும்;
மனசு தருவாயா?
- பச்சியப்பன்
அவைகளோடு நானும்...
- விவரங்கள்
- பச்சியப்பன்
- பிரிவு: கவிதைகள்
More articles by பச்சியப்பன்
- பாடு (29 ஜூன் 2012)
- நீ மட்டும் படிப்பதற்கு (25 ஏப் 2010)
- உபயம் ஒரு பேருந்து நிழற்குடை (25 ஏப் 2010)
- கரும்புக் கூலி (25 ஏப் 2010)
- வாய்த்தல் (25 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.