கைச் செலவுகளைக் கணக்கில் வைத்து
மோசமான அவருக்கு
‘அன்புள்ள அப்பா’ எனத் தொடங்குவதை
நிறுத்திவிட முடிவதில்லை

ஒற்றைச் சிகரெட்டிற்காய்
நண்பனின் வெற்று வரிகளையும்
கவிதையெனச் சிலாகிக்காமல்
மெளனமாய் வந்துவிடத் துணிவில்லை

கணக்கு வைத்துக்கொண்டு
‘டிபன்’ தரும்
கட்டைக்குரல் வாய்த்தவளின்
ஜீவ காருண்ய பிரதாபங்களை
உரத்துப் பேசிக்கொண்டிருப்பதுபோல்
நேர்ந்துவிடுகிறது அவ்வப்போது

வார்த்தை விதைத்து
வாழ்க்கை முளைக்க வைக்கும்
சித்துவேலை கைவந்துவிட்ட பிறகு
இருக்கலாம்
இந்தக் கவிதையிலும்
சில பொய்கள்

பச்சியப்பன்

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.