manஒரு கங்கு போல
தொண்டைக்குழிக்குள்
திரளுகிறது வாழ்க்கை.

விறைத்துதிரும் பட்டாம்பூச்சி
சிறகில் தொம்மென்று
விழுகிறது பனித்துளி.
கண்ணுக்குள் ஊசி முனையாய்
குத்துகிறது மரணம்.

அதுவாகவே மேல் தடவிப்போகிற
குளிர் தென்றலை
ரசிக்க விடாமல் திரை போடுகிறது
ஒரு இரவுப்பாடல்.

துப்பாக்கி ரவையினால்
வருகிற மரணம் நொடிப்பொழுதில்
கழுத்தை முறிக்கிறது.

எல்லோரும் அழுதிருக்க
வழிகிறது வாழ்க்கை.
தூக்கம், கனவு, விழிப்பு எல்லாமே
மரணத்தை நிறைத்திருக்கின்றன.

எழுதும் பேனாவின் முனை கூட
மீள வந்து பிடரியில்
குத்துவதான அச்சம்

கல்லாய் பேயாய் கணங்களாய்
வல்மிருகமாகி பறவையாய்
எல்லாப்பிறப்பும் பிறந்திருக்கலாம்
அல்லாஹ்வே
மனிதனாய் தவிர்த்து........
இளைய அப்துல்லாஹ், லண்டன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It