தேடுதல் வேட்டை நிகழுமாயின்
என் வீட்டில்
அதிகம் அகப்படக்கூடும்
அடகுக்கடை ரசீதுகள்

தாலிக்கொடி தொடங்கி
மகளின் வெள்ளி
கொலுசு வரை
எல்லாமே சோகன்லால்
எடையிட்டவைதான்

இருக்கிற சீட்டுகள்
போதாதென்று
தபால்காரனும்
சேர்க்கிறான்
ஏல அறிவிப்பு அட்டைகளை

அடிக்கடி கனவு வருகிறது
வெள்ளத்தால் மூழ்கும் ஊரில்
என் குடும்பம்
காகிதங்களால் நிரம்புவதாய்.


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.