முதலாளிகள் அவன் முதுகில்
சவாரி செய்தே பழக்கமானதால்
Funeralஇன்று
பிறர் தோளில்
ஏறிச் செல்வது புதுமையாயிருக்கிறது
அவனுக்கு.

அவன் பாதைகள் இன்று
மலர்களால் நிரம்பியிருக்கின்றன
அதனாலேயே
அவனுடைய பாதங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.

யாரோ ஒரு
மந்திரியின் வருகைக்காக
இன்றும் காத்திருக்க வேண்டியிருக்கிறது,
போக்குவரத்து நெரிசலில்.
அவன் காத்திருத்தலின் நீளம்
மிகவும் நீளமானது...
இலவச நோட்டுப் புத்தகம்,
ரேசன்கடை, அரசு அலுவலகம்,
இலவச வேட்டி சேலை என
அவன் காத்திருத்தலின் நீளம்
மிகவும் நீளமானது.

இவன்
செத்தும் காத்துக் கிடந்த
சீதக்காதி!

மூணாம் நாள்
அவன் வீட்டில் தொடர்ந்து
நினைக்கவும், அழவும்
நேரமற்ற
அதே அவசர வாழ்வு.

முப்பதாம் நாள்
அதேக் குழியில் புதைக்கப்பட்டது
இன்னொரு பிணம்...

முதுகில் சுமந்தே
பழக்கப்பட்டவனுக்கு
இப்போது மார்பில் சுமை!

கதிர்மொழி

More articles by கதிர்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.