Confusionஅதிவேகமாகச் செல்லும்
கைப்பிடிகளற்ற
வெற்றுப் பேருந்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்

குடிபோதையில் இருப்பதால்
ஓட்டுநர்,
கண் முன் தெரியாமல்
பேருந்தை ஓட்டுகிறார்.

ஏதோ ஒரு திருப்பத்தில்,
விரைந்து வந்த விசைகளால்
கண்ணாடி சன்னல் வழி
தூக்கி யெறியப் படுகிறேன்.

அப்போது,
அவசரமாய்
என்னைத் தாங்கிய
ஆயிரம் கைகள் நீயா?
இல்லை,
கட்டுக் கடங்கா வேகத்தில்
என்னை நசுக்க
வந்துக் கொண்டிருக்கும்
அடுத்தப் பேருந்து நீயா?


கதிர்மொழி

More articles by கதிர்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.