ஏமாறக்கூடாதென்று
குடுவை நீரைக் கையிலேந்தி
பெளர்ணமி காட்டுகின்றேன்
விரல்களின்
இடைவேளி வழியே
வழிந்தோடிவிடுகிறது
காணாமல்போன
நிலவு குறித்து விசும்புகிறான்
மறைந்துபோன
ஆறுபற்றி
நான் யாரிடம் கூறுவது?
- மாறன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.