மஞ்சள்நீர் விளையாட்டு
சொம்பிலே நீரெடுத்து
சுந்தரிநீ சிரித்தபடி
மாமன்மேல் ஊத்திடவே
மானைப்போல் வந்தாய்
தூரத்திலென்னைப் பார்த்து,
துரத்திநீ ஓடிவர
வழியில் தடுக்கி விழப்போக
உன்னைத் தாங்கிப் பிடித்தேன்
கையிலே இருந்தசொம்பு
கவிழ்ந்து கொட்டி
மஞ்சள்நீர் இருவரின்
மேனியை நனைத்தபொழுது
அணைப்பளித்த இன்பத்தில்
மெய்மறந்து இருவருமே
மயங்கி நின்றோமே
மீண்டும் அத்தகைய
பொழுதுக்காக காத்திருப்பேன் எப்போதும்
More articles by செங்காளி
- அழகிய ‘ழ’ (24 ஏப் 2010)
- உள்ளேயும் வெளியேயும் ! (24 ஏப் 2010)
- செங்காளி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- செங்காளி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.