templeஅவன்
சாரம் கட்டினான்,
கல் உடைத்தான்,
மண் சுமந்தான்,
சாந்து குழைத்தான்,
கோயில் கட்ட.
குடமுழுக்கு நடந்தபின்
பொங்கல் வைத்தான்
கோயிலுக்கு வெளியே.
பூசை செய்தான்
கோயிலுக்கு வெளியேயிருந்து.
ஏன்?
இறைவன் எங்குமுள்ளான்
என்பதினாலா?
-செங்காளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.