ஒரு எலும்பை
Killingநசுக்கிக் கொன்ற
கையோடு
உப்பெடுத்து வருகிறீர்கள்
அட்டைப்பூச்சியை
உருக்குலையச் செய்ய

எலிகளுக்கு
விஷம் வைத்துவிட்டு
நாய்கள் குறித்து
மனுப்போடுகிறீர்கள்
மாநகராட்சிக்கு

தும்பியை நூலால் கட்டி
துடிக்கச் செய்துவிட்டு
வண்ணத்துப்பூச்சி தேடுகிறீர்கள்
வண்ணமிழக்க வைக்க

முருங்கையின் கம்பளிக்கும்
வேம்பின் தேனடைக்கும்
தீப்பந்தம் கொளுத்துகிறீர்கள்
வெறியோடு

குறி பார்த்து எறியப்படும்
உங்களின் கற்களுக்கு
உதிர்வது
பழங்களோடு சில
பறவைகளும்தான்

உங்களைத் தவிர
இவ்வுலகில் வாழ
யாவும்
அருகதையற்றவையாகி வருகின்றன

ஒரு நாள்
நீங்களுமாவீர்கள்.

மாறன் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.