நேரம் போகவில்லையா?
கவிதை படியுங்கள்

writingsபுரியவில்லையா
விழுந்து விழுந்துப்
படியுங்கள்

இன்னும் புரியவில்லையா
மூழ்கி மூழ்கிப்
படியுங்கள்

வீழ்ந்தும்
மூழ்கியும்
மூச்சடக்கியும் பயனில்லையா

பரவாயில்லை
புரிந்துகொள்ளாதபோது
கவிதை
புனிதமானது

புரிந்துகொண்டபோது
கவிதை
மரணமானது


பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It