group photoகண்ணில் பட்டது
பழைய புகைப்படம் ஒன்று!

அழகிய ஆலமரம்
அருகில் வரிசை வரிசையாய்
ஊழியர்களும் நிர்வாகிகளும்!

உற்றுப் பார்த்தேன்...
அழகாகச் சிரித்துக்கொண்டு சிலர்!
ஆணவமாய்ப் பார்த்துக்கொண்டு பலர்!

ஓ! இந்தக் காலங்கள்தான்
எத்தனை கணப்பொழுதில்
கரைந்து விட்டன!

புகையானோர் பாதி!
புதையுண்டோர் மீதி!
ஆனால்...

புதிய விழுதுகளுடன்
ஆலமரம் மட்டும்
இன்றும் கம்பீரமாக...!

அக்னிப்புத்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.