முன்நெற்றி உச்சி முகர்ந்து - என்
முதல் முத்தத்தை உனக்களித்தேன்

dog dollஉன் முகத்தை உள்ளங்கையில் ஏந்தி
கண்ணோடு கண் நோக்கி
கன்னத்தில் கன்னம் இழந்தேன்
சிலும்பி இருக்கும் உன் தலைமுடி வருடி
சீராய் இருக்க என் விரலால் கோதினேன்

தூரத்தில் நின்றும் அருகினில் வந்தும்
உன் அழகை ரசித்தேன்
விரும்பி கேட்ட நம் உறவினருக்கு
விட்டுக் கொடுக்க மறுத்து
உனக்காக பகையாளியானேன்

புகைப்படத்தில் உன்னுடன் சேர்ந்திருப்பதில்
புன்னகையுடன் பெருமிதமடைந்தேன்.

இவ்வளவு செய்தும்...
என் மடியில் கிடத்தி
மனதார கொஞ்சும் பொழுதில் கூட
உன் கன்னி மழலையில்
வவ் என்று குரைக்கமாட்டாய்
முன்னங்கால் நீட்டி நீட்டி
சண்டையிடுவதோ
கிரில் கதவில் முகம் நுழைத்து
குரைத்தது தீர்ப்பதோ
உன்னால் முடியாது - ஒழியட்டும்
வீட்டையும் பாதுகாக்க இயலாது . . .
அதையும் ஏற்றுக் கொள்கிறேன் . . .ஆனாலும். . .

உயிர்ப்புள்ளதை வளர்க்க
இடமில்லையென்று தானே
உன்னை வாங்கினேன் !
என்னைப் பார்த்ததும் உன்
சின்ன வாலைக் கொஞ்சமேனும்
ஆட்டக்கூடாதா?
இதான் உன் நன்றியா?. . . .
என் பொம்மை குட்டிநாயே.



பதமப்பிரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.