Moon setநிச்சயமாய் நிலவே
நீயே நிலமிறங்கினாலும் - எட்ட
நின்றே நினைவுகளில்
நிறுத்திக் கொள்வேன்.

தூரத்து கோயில் கோபுரமும்
தூண்டா மணி விளக்கும்
தூரமாய் இருப்பதாலேயே அழகு.

உள்ளங்கையில் மலர் பொதிந்து..
உருகி உருகி உதவிகள் செய்து
உறவாடும் மாணவியாய் இன்றி..
ஊரெல்லையில் உனதுருவம்
மறையும் வரை நின்று
மௌனமாய் வீடு திரும்பும்
மாணவியாய் இருக்கவே விருப்பம்.

உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே
உயிர் நிறைப்பதால்
உன்னை காதலிக்கிறேன் என சொல்லியாகும்
கட்டாயம் எனக்கில்லை.

மறுத்து விட்டாயென்றால்
மனோதிடமின்றி
மறக்க முயன்றிடுவேன் - எனவே
மறந்தும் சொல்லமாட்டேன் உன்னை
மணக்க ஆசை என்று. 

பத்மப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.