Womanஇரவைக் கிழிக்கப் பார்க்கின்றன
என் கைகள்.
அந்திக் கருக்கலோடு
மங்கிப் போகிறேன் நானும்.
சாலை முடிகின்றது
காணவில்லை
உன்னைக் காணவில்லை

உருமுகின்ற மேகங்களின் கீழே
நான், ஏற்கனவே
நனைந்துபோய் நிற்கின்றேன்.
சம்பவங்களின் அங்கமாக இருந்தாலும்
என்னில் ஒரு சலனமில்லை.
பார்வை மட்டும் வீசிச் சென்றது
உன் நிழலா
அல்லது நீதானா?

விழுந்துவிட்டேனா
வளைந்துவிட்டேனா
வெறும் கற்பனைக் கனவுக்குள்
கரைந்துவிட்டேனா?
விழித்திரைகளை விலக்கி விலக்கி
வெறித்து வெகுதூரத்திலும் தேடுகின்றேன்
காணவில்லை...
உன்னைக் காணவில்லை! 

கற்பகம் இளங்கோவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by கற்பகம் இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.