இயலாமையின்
வெப்பத்திலிருந்து கசிகிறது
தான்மை
உடைபட்ட கொப்புளத்தின்
சீழினைப் போல.
எல்லாமறிந்தவனென்னும்
போர்வையை
இழுத்துப் போர்த்திக் கொள்ள
இழித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது
ஏதேனும் அறிந்தவர்களை.
அங்கத இலக்கியத்தில்
தஞ்சமடைந்த படி
காழ்ப்பு மனம்
தன் குரூரத்தின்
பற்களில்
ஒழுகும் குருதி துடைக்கிறது.
நேற்றைய மன்னர்களின்
சமாதிகளைத் தோண்டியெடுத்து
தனக்கான
நாளைய வீதிகளை
சமைத்துக்கொள்ளத்துடிக்கிறது
தற்கிலி குணம்.
எழுதின் மேல் கவியும்
நோயறிவால்
இருண்டு விடுகிறது
எழுதுகோல்களின் சுய வெளிச்சமும்.!
- இப்னு ஹம்துன்
தொடர்புடைய படைப்புகள்
சுய மோகிகளுக்கு
- விவரங்கள்
- இப்னு ஹம்துன்
- பிரிவு: கவிதைகள்
More articles by இப்னு ஹம்துன்
- காற்றில் கனக்கும் சொற்கள் (18 மே 2010)
- முட்களும் பூக்களும்! (25 ஏப் 2010)
- நகையே! (25 ஏப் 2010)
- மண் வாச(க)ம் (25 ஏப் 2010)
- ஏதேன் சீதனம் (24 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.