வெயில் குறித்த
கவிதைகளை
குளிர் அறைகளில் அமர்ந்து
நிதானமாய்
எழுதுகிறேன்

என்
காதல் குறிப்பேடுகளில்
வெயில் சாமரம் வீசிய
கானல் காதலியின்
நினைவுகள் எழுகின்றன.

அவள்
ஸ்பரிசங்கள் அந்நியமாய் போன
கால இடைவெளிகளிலும்
மிதந்து வருகின்றன
கடந்த காலம் கவர்ந்து நடந்த
கைவிரல்கள்.

இன்னும்
காதலின் ஈரம் காயாமல்
அவள்
முத்தங்களின் முந்தானைகளை
முகர்ந்து சுகிக்கிறதென்
நாசி.

குளிர் குறித்த
கவிதைகளை
வெயில் அறைகளில் தான்
எழுத முடியும்
போலிருக்கிறது. 

சேவியர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.