More articles by ரசிகவ் ஞானியார்
- பஹல்காம் தாக்குதல்: மதத்தையும் மனிதத்தையும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் (28 ஏப் 2025)
- நீதியின் அடைக்கலம் (03 ஏப் 2025)
- அவர்களுக்கும் ஒரு நாள் பசிக்குமல்லவா?! (10 ஏப் 2024)
- புல்டவ்சர் தீவிரவாதம் (13 ஜூன் 2022)
- சங்கிகளை காணவில்லை (10 ஆக 2020)
அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!
தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!
மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !
நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !
சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!
ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !
இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!
இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?
- ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )