Poor boyஅடுத்த தீபாவளியின்
புதுத்துணியை இப்போதே
காணும் பாக்கியம்
உண்டோ உங்களுக்கு?
எனக்கு உண்டு.
கரும்பச்சை நிறத்தில்
காற்சட்டை
கிளிப்பச்சை நிறத்தில்
முழுச்சட்டை.
கைமடிப்பிலோ
காலர் ஓரத்திலோ
சட்டைப் பையின்
அருகிலோ
கால் மூட்டிலோ
இடுப்பு வார்பட்டியின்
இரண்டொரு காதுகளிலோ
கிழிசல் ஏற்பட்டு, சற்றே
சாயம் மங்கி
அடுத்த தீபாவளிக்குள்
என்னிடம் வந்துவிடும்
சின்ன அய்யாவின்
புத்தாடை 

சபாபதி சரவணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.