இமைகளுக்குள்
உறுத்துகிறாய்
இருளும்
ஒளியும்
மங்கித்தெரிய ...
தொட்டிக்குள்
சுருளும் வேராய்
உனக்குள்
என்னைச் சுருக்காதே ...
நீரின்றி
மலரும் செடிபோல
மனதெனது
உனக்கு அழகாகவோ
பிறருக்கு நிழலாகவோ
வாழமுடியாமற் போகலாம்
நான் உடைபடும் போது.
- அ. லட்சுமிகாந்தன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.