Peopleமண்புழுவை
விழி விரித்துப் பார்த்து ரசிக்க
இன்னமும் சிலர்
இருக்கிறார்கள்

நடத்துனரிடம்
சில்லறை பாக்கி
கேட்கக் கூச்சப்பட
இன்னமும் சிலர்
இருக்கிறார்கள்

பகலில் ஒளிரும்
சோடியம் வேப்பர்
வெளிச்சத்திற்கு
மனம் கசிய
இன்னமும் சிலர்
இருக்கிறார்கள்

வெளியிட்ட தொகுப்பை
வெளியிடாதவர்களுக்கு
சமர்ப்பணம் செய்ய
இன்னமும் சிலர்
இருக்கிறார்கள்

இந்தக் கவிதையை
வேண்டாவெறுப்பாய்
படித்து வைக்க
இன்னமும் சிலர்
இருப்பதுபோல்...


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.