பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!
தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்
கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்....
கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும் போதாதோ?
ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய
மேவியவள் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்
நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து
மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.