திரையரங்கு நோக்கி
நடந்துகொண்டிருந்த எங்களை
சடுதியில் வந்து
நனைத்துச் சென்றுவிட்டது
இந்தக் கோடை மழை

க்ரீம் அப்பி போட்ட பவுடரின்
சாயம் வெளுத்துவிட்டதாகப்
புலம்புகிறாள் மகள்

பேன்ட்டின் பின்புற தூய்மைக்கு
இனி உத்தரவாதமில்லையென்று
சிரிக்கிறாள் மகன்

படம் முடிந்து திரும்புகையில்
வராதிருக்க வேண்டுகிறாள்
மனைவி

குடையைக் கேடயமாக்கி
ஜெயித்து வந்தவனை
நிராயுதபாணியாக்கி வீழ்த்திய
மழையின் வெற்றி ருசியைச்
சுவைத்தபடி
எட்டி நடைபோடுகிறேன் நான்


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.