சாதி மருட்டினை மோதி விரட்டி
More articles by தியாகு
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (16 பிப் 2026)
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (14 மே 2025)
- தமிழ்நாட்டைக் காக்கும் அரண் பெரியார்! (22 ஜன 2025)
- புதுமைத் தமிழ்ஒளி பொதுமைச் செவ்வொளி! (11 செப் 2024)
- மாரிமுத்து - மகாலட்சுமி ஆணவப் படுகொலை (18 அக் 2023)
சாதிக்க பிறந்த சூரியனே!
இல்லை கடவுள் இருந்திடில்
இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்!
உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்ற
காற்றும் அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில்
பிறக்கின்ற பிள்ளைக்கும் பிறந்து
இறக்கின்ற மனிதற்க்கும் பூமிபொதுவே என்றாய்!
வெள்ளை தாடியும் கருப்பு சட்டையும்
கையில் தடியும் வார்த்தையில் வெடியும்- கொண்டுநீ
நடந்ததால் விடிந்தது எங்கள் காலை!
சாமி இருந்திடில் வேதம் இருந்திடும் -
பேதம் இருந்திடும் அதனால் சாமிஒழித்திட
புறப்பட்ட எங்கள் புதுசாமி நீ!
- தியாகு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )