காலத்துக்கு எதிரானதோர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது!
நமக்குள் ஒருவன் என மனிதர்கள் உணர்ந்தால்
உண்டாகும் மாற்றங்கள் மேலும் மேலும்.

ஒரு முட்டாள்தனமான
சுயநலத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட
“அவர்களை” அழிப்பதன் மூலம்
“நம்மை” - யும் அழித்துக் கொள்வதும்
“நாம்” என்பதும் “அவர்கள்” என்பதும் கடக்கப்பட்டு
மனித இனத்தின் முழுமையாய் மாற வேண்டும்
என்பதும் புலப்படும்.

யுத்தம் தொடருகையில் இரு அணிகளுமே
ஒன்றையொன்று ஒத்ததாகவே
காட்சியளிக்கின்றன.
தன் வாலைத் தானே விழுங்குகிறது
தறுதலை உடும்பு.

முற்றிலும் சுழலுகிறது காலச்சக்கரம்
நாமும் அவர்களும் ஒருவருக்கொருவரின்
நிழல்கள் என்பதை நாம் அறிவோமா?

நமக்கு அவர்கள் அயலார் என்பது போலவே
அவர்களுக்கு நாம் அயலார்
என்பதை அறிவோமா?

எப்போது விலகும் மறைத்திட மூடிய மாய இருள்?
எப்போது மாறும் சாடைப்பேச்சுகள்
கேளிக்கையாக?
இன்னமும் கூட தொழுநோயாளிகளை
முத்தமிடுகின்றனர் பாதிரியார்கள்.
தொழுநோயாளிகள் பாதிரியார்களை
முத்தமிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மூலம்: R.D.LAING
தமிழாக்கம்: புதுவை ஞானம்.


புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It