இன்று
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)
சமையல் கியாஸ்
தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது.
இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப்போட்டிருந்தது.
இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது.
இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.
இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது.
இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக் கொண்டது.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )