பால் புகட்டும் அம்மாவுக்குள்ளிருந்து
More articles by ஆதவன் தீட்சண்யா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - தோற்றமும் செயல்பாடுகளும் (07 ஜூலை 2026)
- நந்தலாலா எனும் தனிப்பேராளுமை (30 ஏப் 2025)
- காக்கைக் குருவி உங்கள் ஜாதி (02 ஏப் 2014)
- காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல் (24 ஜன 2012)
- கறை இருந்தால் நல்லதுதானே? (10 மார் 2011)
பதறியெழும் பெண்ணொருத்தி
மாராப்பை கவனமாய் திருத்திய பின்
தண்ணீரை மட்டுமே துவட்டவல்ல
டவல் கொடுத்து விரட்டும் போதிருந்து
தாளிட்டுக்கொண்டு குளிக்கத் தொடங்குகிறான்
அதுவரை மகனாயிருந்த ஆண்
நறுமணம் கரைந்தோடும் சோப்புநுரைக்குள்
உரையாடலற்று விரைத்துக் கிடக்கின்றனர்
தாயும் மகனும்.
- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )