குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தனிமை,
முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.
அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,
காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..
- க.செ.வெங்கடேசன்.. அபுதாபி... (
களவு கூட சந்தோஷம்தான்
- விவரங்கள்
- க.செ.வெங்கடேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by க.செ.வெங்கடேசன்
- நட்பின் பிறழ்வு (11 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.