மறந்துபோன
More articles by றஞ்சினி
- ஈழத்து அகதியாய்.. (15 ஏப் 2010)
- இந்நூற்றாண்டிலும்..... (11 ஏப் 2010)
வீணையின்
புதிய சிணுங்கல்களாய்
இசைக்கிறது
என் ஆன்மா
பழகிவிட்ட நட்பில்
புதிய திருப்பமாய்
வந்து
வந்துபோகிறது
உன்வார்த்தைகள்.
என் நரம்புகளில்
இசைமீட்ட
தேவையில்லை
இனி எனக்கொரு
மாலைப் பொழுது.