birds in a treeவெளிர் நீல
வானத்தில்
பெரும் பறத்தலுக்குப் பிறகு
சமன் செய்து கொண்டு
கீழிறங்கி
வானாளவ விரிந்து நிற்கும்
மரத்திற்கு வருகிறது
திசையறிந்த பறவை

பூமிக்கும், வானுக்கும்
ஈரத்தை
அனுப்பிக் கொண்டிருக்கும்
அதன் கிளையில்
வட்டமிட்டு அமர்கிறது
பறவை

கீழே படுத்தபடி
காலதீதத்தை
அகத்தில் நோக்கிக் கொண்டிருக்கிறான்
புதிய சித்தார்த்தன்

தன் திசையிலிருந்து
எடுத்து வந்த செய்தியை
மவுன மொழியில்
கடத்திவிட்டுப் பறக்கிறது
புதிய பாதையில்

- மாரி.கிருஷ்ணமூர்த்தி

More articles by மாரி.கிருஷ்ணமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.