குளித்தல் என்பது
பொதுவானதே தான்
ஆண்கள் உடலை மட்டும்
கழுவிக் கொள்கிறார்கள்
பெண்கள் உடல் வலியையும்
மனச் சுமையையும்
மெதுவாக இறக்கி வைக்கிறார்கள்

பொதுவாக அதிகாலை நேரத்தில்
குளித்து முடித்து தலை துவட்டும்
ஆண்களைப் போல
அந்த நேரம் அமைந்து விடுவதில்லை.

பெண்களுக்கு
மாதவிடாய் நாட்களைத் தவிர
மற்ற எல்லா நாட்களிலும்
நீரின் கீழ் நின்றபடி
வலியையும்
மௌனத்தையும்
மெதுவாக இறக்கி வைக்கிறார்கள்.

அடையாளமின்றி
தண்ணீர்த் துளிர்களில்
கலந்து ஓடுகிறது
பெண்களின் கண்ணீர்.

- மு.பிரபு, வேலூர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.