பிரியங்களின் வழியே
பொறுமை பூக்கும்
நதியோரக் கரைகளில்
கொலுசொலியை
புலம்ப விடாதே

*
இதை ஒரு பழக்கமாகவே
வைத்திருக்கிறேன்
தினம்
ஒரு
புதிய முகத்தையாவது
மனதில் பதிய வைப்பது

*
குட்டி வந்தாதான்
குரல் எழும்புகிறது

யாருமே ஏறாத
ஒற்றைப் பாலத்தின்
முது குரல் கேட்கிறது

வலிக்காமல் அமர்கிறேன்

*
வயிறு நிறைந்தவன்
வாக்கிங் போகிறான்
வயிறொட்டியவன்
வாழ்வை
இழுத்துக் கொண்டிருக்கிறான்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.