இரயில் பயணத்தில்
பின்னோக்கி ஒடுகின்றன

புல் மேயும் பசுமாடுகள்

இலை மேயும் வெள்ளாடுகள்

கருவேல மரத்தடியில்
அமர்ந்திருக்கும் ஆட்டிடையர்கள்

குடைவிரித்து நிற்கும்
ஒற்றை வரிசை பனை மரங்கள்

வெறிச்சோடிப் போன சிற்றூர்கள்

ஆளற்ற புற இரயில் நிலைய மேடைகள்

புறப்படும்போது உடன் வந்த நினைவுகள்

சற்று முன் என்னோடிருந்த சுவாசங்கள்

மற்றும் அந்த சுவாசங்களைக்
கொண்ட நான்கள்

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.