விளிம்பு நிலைக்கும் அப்பால்
தூக்கிப் போட்டார் கடவுள்.

பின்புறமாக மறைந்து வந்து
அவர் கண்களைப் பொத்தினேன்

மெல்ல கைகளை விடுவித்துக் கொண்டே
விளிம்பு நிலை என்றால்
தூரமென்றா நினைத்தாய்
உன் மனதிலிருந்து உன்னை
வெளியே தூக்கி வீசுவது அவ்வளவு தான் என்றார்

புன்னகைத்துக் கொண்டே
நான் அதிராது நிற்பது கண்டு
ஒரு கணம் சிலையாகி
இப்படி சொல்லி மறைந்தார்

விளிம்பு நிலை மனிதர்கள்
எதற்கும் சிலையாவதில்லை

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.