மழைநாளில்
கன்னம் சிவந்திருக்கும் வீடு
வெயில் நாளில்
வண்ணம் சேர்ந்திருக்கும் வீடு
வேறென்ன
அடையாளம் வேண்டும்
வந்து சேர்

*
சட்டென சிறிதானது எப்படி
சட்டென பெரிதானது எப்படி
பூனையும் புலியும்
எதிர் எதிரே நிற்க
மாயக்கண்ணாடியாய்
இடையில் நான்

*
சதா தாவிக்கொண்டிருக்கும்
மனம் ஒரு தவளை
தானே சென்று
சிக்கிக் கொள்ளும்
பதுங்கி இருக்கும்
பாம்புசூழ் உடல் இது

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.