woman_210ஏதோ ஒன்றாக
உடனே உருமாறிட ஆசை

விரித்த சிறகின் நிழலை
பூமியில் கர்வத்துடன் படர்த்தி
அழகு பார்க்கும்
ஒரு பறவையாய்

இரைக்கு உறுமியபடி
தன் குட்டியையும்
வாஞ்சையுடன்
நக்கிக்கொடுக்கும்
ஒரு சிங்கமாய்

உருமாறி, கலையும்
மேகமாய்...


இரவின் தனிமைக்கு
துணை சேர்க்கும்
கிராமத்து ஆற்றின்
சிறு சலசலப்பாய்

ஆகக்கூடி
நானாக  மட்டும் இல்லாமல்
முற்றிலும் பிறிதொன்றாய்

குறைந்த பட்சம்
உன்னைபோலவாவது

உடன்பாடில்லா மௌனத்தை
உடைத்தெரியாமல்
தொடர் மௌனத்தை
கேடயமாக்கும்
உன் யுக்தியை
கண்டறியும் பொருட்டாவது

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It