இன்று ஒரு ரோட்டு மாடு
முட்டப் பாய்ந்தது
ஓடி வந்து உரசியது
ஓவென உறுமியது
மறைகழன்ற
சக்கரக் கால்களில்
மதி மருந்துக்கும் இல்லை
பாடியே அடக்குவது போல
பேசியே சற்று அடக்கினேன்
நல்லதோ நேர்மையோ
உண்மையோ பொறுப்போ
துளியும் இல்லாத கண்களில்
அதுக்கு
அறியாமைப் பசி அவ்வளவு
விலங்குகளோடு
மல்லுக்கு நிற்கக் கூடாது
மாறாக வழி விட்டு
வாழ்த்தினேன்
ரோட்டு சிறுத்தையிடம் சிக்க
சீக்கிரம் வாய்க்கட்டும்...!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.