ஆளாகிவிட்டேனாம்
உறவினர்களின்  ஆரவாரம்
தோழிகள் சகிதம்
பள்ளியில் அரட்டை
முடிந்தே போனது
நேற்றோடு.....
தென்னங்கீற்றுகள்
முதல் சிறையாய்..
சூட்டின பூச்சரம்
கை விலங்காய்...
என்றும் மாறாதது
முற்றத்தில்
கூட்டமைத்து வசிக்கும்
சிட்டுக்குருவியின்  உடனான
என் நட்பு......!

- வில்லியனூர் ராஜ கருணாகரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.