இரவின் போர்வையை
 
இறகுவருடலில் விலக்கி
 
கள்வன் அணைத்தான்
 
விடியல் வெய்யில்
 
 
பொன்னிற ஒளிக் கவர்ச்சியில்
 
மழலை அள்ள விளையும்
 
மஞ்சள் விடியற்காலை வெயில்
 
கண்மட்டுமே பார்த்த காதல்
 
 
வெண்ணிற பனி லோகையில்  

புல் பாதரியார் ஆசிர்வதிக்க 
புது மனைவியை முத்தமிடும்
 
விடியல், ரோஜா இதழில்
 
 
இரவு குளிரின் மீதம்
 
ரோஜாயிதழில் வெண் பனி
 
பெண்ணிதழில் செந்நிற முத்தக்கனி  

- காயத்ரி மகாதேவன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by காயத்ரி மகாதேவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.