நீர் சுழித்தோடும்
சிற்றோடைக் கரையில்
மிகுமகரந்தம்
குளித்துப் பூத்திருக்கும்
நாணல் பூக்களாகி
நிற்கிறேன்.
என் சிறு செம்மண் பாதையில்
இசைக்குறிப்பெழுதி போயிருக்கிறது
உன் செம்பாதக் கொலுசுகள்.
யாவரும் குளித்துக்
கரையேறிய பின்
சலசலப்பின்றி படித்துறையில்
நீராடும் மழைக்கால வெய்யிலை
அள்ளி வரும் பனிக் காற்றில்
நின் திருமேனி
வாசனையடி பாவாய்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.