ராத்திரியில் பகலுண்டு
பகலிலும் இரவுண்டு
விடுமுறையில் தினம் உண்டு
விடுமுறைக்கும் தினம் உண்டு
வெயில் பிழி மழை உண்டு
வெற்றிலை மெல் வெம்மை உண்டு
வார்த்தை குலுங்க மௌனம் உண்டு
பிரார்த்தனை அற்ற பிரியம் உண்டு
வாய் முனங்க பொருள் உண்டு
கண்கள் கலங்கும் கனவு உண்டு
ஒரு காதலை மறைத்ததுண்டு
ஒரு காதலை மறப்பதும் உண்டு
தூர தேசப் பறவைக்கு
தனையே மென்றிடும் தவமுண்டு
தாகம் தீரா நதிக்கு
வானம் தொடவும் திசை உண்டு
உண்டு உண்டு உண்டு
உண்டபின் ஆன உடல் இது கண்டு
உண்டு உண்டு உண்டு
உண்ணா நோன்பிலும்
பசி ஆறுதல் உண்டு

- யுத்தன்

Pin It