கண்டும் காணாமல் இருக்க
இருளால் முடியாது
புத்தியின் ஒளிர்வில்
வெளிச்சமிடும்
தந்திர குறிப்புகள்
இருளிடம் இருக்கிறது
மெல்ல மெல்ல நகர்ந்தாலும்
இருளே துணை
சென்று சேருமிடம்
வெளிச்சமானால்
இருளுக்கும் தான் நிம்மதி

*
இறகு தான் நான்
விட்டு விடுங்கள்
யார் காதுக்காவது
ரகசியம் சொல்ல
பணிக்கப்பட்டிருப்பேன்

- கவிஜி

Pin It