அம்மா
துணியைப் பயன்படுத்தினாள்
நான் நாப்கின்
மகள்
மென்ஸ்ட்ருவல் கப்க்கு
பழகிக் கொண்டாள்
அடுத்த மாதம் வேறு வரலாம்
ஆனால்
அன்றிலிருந்து
அந்த நாள் வந்தால்
தீட்டுக்காரிகள் தான்
நாங்கள்

- அ.ஜோதிமணி

Pin It