தினந்தோறும்
யாககுண்டத்தில்
தீக்குளித்து
நல்குடும்பத்தலைவியாக
வெளிவருகிறேன்

தகிக்கும் சமையலறையில்
மனவெப்பமும்
கலந்திருப்பது
யாருக்குத் தெரிகிறது

மனக்குமுறல்களை
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும்
சமையலறைச் சுவர்களுக்கு
புத்தரின் முகம்

ஆத்திரங்களின் வடிகாலாக பாவப்பட்ட
பாத்திரங்கள்

குளிரூட்டப்பட்ட அறையில்
நிம்மதியான
நித்திரையிலிருக்கிறது
மின்விசிறி கோரிக்கை

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.