டக் இன் செய் பூட்ஸ் அணி
சிகை அலங்காரம் சிலிர்க்க
மீசை இருப்பது உன் விருப்பம்
மற்றபடி ராஜநடை அவசியம்
கண்களில் கனிவு தேவை
தீர்க்கம் அதில் கட்டாயம்
பொய் இல்லாத கழுத்து குனியாது
உண்மை தலையில் இருக்கட்டும்
சேவை செய்யத் தயங்காதே
சேர் இரைப்பவனும் வருவான்
இன்ன பிற எதற்கும்
அவசியமெனில் நில்
மற்ற நேரத்தில்
கால் மேல் கால் போட்டே அமர்
மூட்டை மூட்டையாய்
காசுள்ளோன் நிற்பான்
முத்து முத்தாய் கையெழுத்திடும் நீ
மதி பெற்ற மானுடத்தில் மூத்தோன்
நேரத்துக்குத் தேநீர் அருந்தி
அமர்ந்தபடியே பெல் அடி
வரிசையில் கூனிக் குறுகி
அடுத்து வருபவன்
ஒரு கிலோ மீட்டர் சுற்றி நட என
ஊருக்கு நடுவே
சுவர் எழுப்பியவனாகவும் இருக்கலாம்
- கவிஜி
மதி பெற்ற மானுட மூத்தோன்
More articles by கவிஜி
- வெட்கம் கூடவே சிற்பம் (31 ஜூலை 2026)
- நாள்பட்ட சாலைவாசி (22 ஜூலை 2026)
- நிர்மலா மேரியை மறக்க முடியுமா? (14 ஜூலை 2026)
- நிகழ விடுகிறேன் (14 ஜூலை 2026)
- காதலென்பது (08 ஜூலை 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.