புழுதி வாசனையைக் கிளப்பி
என் பூமியை மலர்த்தும்
இந்த மழை வாசனையை விவரிக்க
உலகின் எந்த மொழியிலும்
எந்தச் சொல்லிலும் முடியாமல்
அவள் கழுத்தோரம் வழிந்து
மார்புக்கு நடுவே
இறங்கிய வியர்வைத் துளியில்
ஒப்புக் கொடுத்து நனைகிறேன்
காமக் கடும்புனலில்..
பெய்யெனப் பெய்கிறாள்
பெருமழைக்காரி.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.