பசு பாதுகாப்பு கிராஸ் சமிதியின் வண்டி
மாடுகளின் உணவை எடுத்துக் கொண்டு
பசுக்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
அக்கம் பக்கத்தில் மாடுகள் காணப்படாமல் இருந்தன.
அவர்கள் அக்கம் பக்கத்திலிருந்து
தூரம் சாணி போன்றவைகளைக் தேடுவதில்
அலைந்து கொண்டிருந்தனர்.
மக்கள் சந்தேகமில்லாமல்
பசு பாதுகாப்புக் குழுவின் வண்டியைச்
சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர்.
அவர்கள் பசித்து இருந்தார்கள்
மற்றும் மனிதர்களாக இருந்தார்கள்
என்பதில் வெட்கமடைந்து இருந்தார்கள்
ஏனெனில் அந்த உணவு
பசுக்களுக்காக கொடுக்கப்படக்கூடியவை.
கொண்டு வரப்பட்டு இருந்த அது
அவர்களுக்காகத் தான் கொடுக்கப்படணும்
ஆனால் வண்டியில் அமர்ந்திருந்த செயற்பாட்டாளர்கள்
சொன்னார்கள் பசுக்களின் உணவு
மனிதர்களுக்கு கொடுக்கப்பட முடியாது என்று.
அவர்கள் இதையும் சொன்னார்கள்
தற்சமயம் மனித பாதுகாப்பு கிராஸ் சமிதி அமைக்கப்படவில்லை
மற்றும்
பசித்த மாடுகளின் உணவு
பசித்த மனிதர்களுக்கு
கொடுக்கும் முடிவு
இந்துத்துவாவின் அமைச்சரவைக் கூட்டத்தில்
எடுக்கப்பட்டு இருக்கவில்லையென்று.

ஹிந்தியில் : தேவிபிரஸாத் மிஸ்ரா
தமிழில் : வசந்ததீபன்

Pin It