நடக்க நடக்க நீள்கிறது...
வேதனையாய் பாதை

பசிக்க பசிக்க தொடர்கிறது...
சாபமாய் வாழ்க்கை

குழந்தைகளின் முனகல்கள்
கொன்று குவிக்கிறது...
வாழ வழி தராத பெற்றோர்களை...

இன்னும் கொஞ்ச தூரம்
என்ற ஒற்றை வார்த்தைகள்
தாண்டியிருந்தது...
ஓராயிரத்தை,

புறப்பட்ட புகைவண்டிகளின்
எண்ணிக்கையை விஞ்சிக் கொண்டிருக்கும்,
புலம்பெயர்ந்த எங்கள் மக்களின் நீளம்

புறப்பட்ட போது
இருந்தவர்களின் எண்ணிக்கை
ஊர் போய்ச் சேரும் நாளில்
குறைந்திருக்கும்
எங்களின் ஆயுளைப் போல...

மனிதப் பிறப்பு வரம் என்று
யார் சொன்னது?

- மு.முபாரக்

Pin It