தலைகுனிந்தபடி வயிற்றுக்காக
மேயுமிந்த செம்மறிகளுக்கு
தேவையிருப்பதுண்டோ
சீருடைகள்,
லெகின்ஸ், சுடிதார், துப்பட்டா
வரிசைகள்,
பொது தரிசனம்,
சிறப்புத் தரிசனம்,
விஐபி தரிசனம்...
வயிறு நிரம்பாத ஆடுகளுக்கு
எதற்கு வைகுண்டம்?
தரிசு நிலத்தில் பசியாறும்
ஆடு மேய்ப்பவனுக்கு
நல்மேய்ப்பர் எனப் பட்டமாம்
சொல்லாழி வெண்சங்கே...

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.